கனடாவில் போட்டியின் நடுவே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை

கனடாவில் போட்டி ஒன்றின் போது குழந்தைக்கு பாலூட்டிய தாயின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கனடா நாட்டின் ஹொக்கி வீராங்கனையாக சேரா ஸ்மால் காணப்பட்டு வருகின்றார். இவாருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகிய நிலையிலும், போட்டியில் பங்குபற்றியுள்ளார். மேலும் இவர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் நடைபெற்ற போட்டி ஒன்றின் இடைவேளையின் போது, தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதுடன், மேலும் உலகில் உள்ள தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான், இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ