பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம்

பிரான்ஸில் நேற்றைய தினம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் ரீபிஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அப்பாவி மக்களைக் காயப்படுத்தியும் சில உயிர்களை பறித்த பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

மக்கள் பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும். கனடியர்கள் மற்றும் என் மனைவி சார்பாக இந்த துயரசம்பவத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். கனடா, பிரான்ஸ் அரசு மற்றும் மக்களுடன் துணை நிற்கிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் இந்த கோழைத்தனமான செயல்களை தடுப்பதற்கும் எங்கள் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ