ஏழை எளியோருக்கு உதவவே குத்துச்சண்டை போட்டி நம்ப முடிகிறதா கனடா பிரதமரின் மறுபக்கம்

கனடா அதிபர் ஜஸ்டின் டுரோடு ஒருவார கால அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்

அரபு ஷேக்கு முதல் இசுரேல் அதிபர் வரை வெளிநாட்டு அதிபர்களை கட்டிப்பிடித்து நட்புநாடாக ஆதரிக்கும் மோடி அவர்கள், ஜஸ்டின் ட்ரோடுவை வரவேற்க தில்லி விமான நிலையம் போக வில்லை. ஏன் என தெரியவில்லை..

கனடாவில் இருந்து டெல்லி வந்து சேர்ந்தபோதும் அமைச்சரவையில் கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சில சமயங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் இந்தியா வந்த பொழுது விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார்.

ஆனால் கனடா பிரதமரை காலம் தாழ்த்தி சந்தித்து உள்ளார்..சமூக வலைதளங்களின் உந்துதல் காரணமாக,தான் மோடி இவரை சந்தித்து உள்ளார் என்ற டாக் ஒரு பக்கம் உள்ளது..

இந்தியாவிற்கு வந்ததில் எந்த வெளிநாட்டு அதிபரையும் பிரதமரையும் மக்கள் இந்த அளவிற்கு கொண்டாடவில்லை, இவரை மட்டும் ஏன் கொண்டாடுகிறார்கள்..? குறிப்பாக தமிழ்நாட்டில்,

கனடாவில் பன்னிரண்டு மொழிகள் பெரும்பான்மையாக பேசபடுகிறது, அதில் தமிழின் பங்கு அளவற்றது..

தன் நாட்டு மக்களால் அதிகமாக பேசப்படும் அந்தபன்னிரண்டு மொழிகளிலும், கனடா நாட்டின் தேசிய கீதத்தை மொழி பெயர்த்த பெருமை இவரையே சேரும்..

அந்த நாட்டின் 150 ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தேசிய கீதத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஒலிக்கச் செய்தார் ஜஸ்டின்..

கடந்த  பொங்கல்  தினத்தன்று, தமிழர் பாரம்பரிய உடை அணிந்து இவரும் கனடா வாழ் தமிழ் மக்களுடன் கொண்டாடினார்..கனடாவில் தமிழுக்கும், தமிழருக்கும் டுரோடு தரும் அங்கீகாரம் அளப்பரியது.

இவரது இளமை காலம் பற்றிய சிறிய தகவல்,

இவரது குடும்பமே அரசியல் குடும்பம் தான்..ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பிர்ரே எலியட் ட்ரூடோ, முன்னாள் கனடா பிரதமர் 

இளைஞராக இருந்தபோது மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக கலக்கியவர் ஜஸ்டின் ட்ரூடோ,

கருணையுள்ளம் கொண்டவர் ஜஸ்டின், ஆனால் களத்தில் சற்றே வித்தியாசம்.. பல அறக்கட்டளைகள், தங்களுக்காக  போட்டியில் கலந்து கொண்டு நிதி  திரட்ட வேண்டும் என்பதை ஏற்று பல   குத்து சண்டைகளில் வென்றுள்ளார்..

இவரது திருமணம் காதல் திருமணமாகும்.. தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் சேவியர், இல்லா கிரேஸ், மற்றும் ஹட்ரியென்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, தலை சிறந்த குத்துசண்டை வீரர்   என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான்   உண்மை,  இல்லாதவர்களுக்கு  உதவவே இதை கற்றுக்கொண்டுள்ளார்..