3 வருடமாக போக்கு காட்டிய வழக்கு முடித்து வைத்த பேஸ்புக் போட்டோ அதிர வைத்த கொலை

ஓட்டவா: கனடா நாட்டில் சரியாக 3 வருடங்களுக்கு முன்பு பிரிட்னி கார்கோல் என்ற 18 வயது பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை போலீஸ் பதிவு செய்து விசாரித்து வந்தது.

எவ்வளவு விசாரித்தும், எந்த ஆதாரத்தை தேடியும் போலீசால் இந்த வாழ்க்கை முடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கை கைவிடும் முடிவு வரை போலீஸ் சென்றுள்ளது.

ஆனால் அந்த பெண்ணின் தோழி ஒருவர் போட்ட பேஸ்புக் புகைப்படம் மூலம் தற்போது இந்த கொலை வழக்கு மொத்தமாக முடிக்கப்பட்டு இருக்கிறது. கொலையாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எப்படி கொலை 
கொலை எப்படி நடந்தது

பிரிட்னி கார்கோல் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட போது மிகவும் அதிக போதையில் இருந்துள்ளார். அவரின் கழுத்தை நெரிப்பதற்காக வளையம் ஒன்று பொருத்தப்பட்ட கயிறு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


விசாரணை 
போலீஸ் விசாரணை

இந்த வழக்கை போலீஸ் எவ்வளவு முயன்றும் முடிக்க முடியவில்லை. இந்த நிலையில் போலீஸ் அந்த பெண்ணின் தோழி 'செயன் ரோஸ் அண்டோனி' என்ற பெண்ணின் பேஸ்புக் பக்கத்தை துழாவி பார்த்து இருக்கிறது. அதில் அந்த பெண்ணும், கொலை செய்யப்பட பிரிட்னியும் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது. அந்த புகைப்படம் பதிவு செய்யப்பட நாள் அந்த பெண் கொலை செய்யப்பட நாள் ஆகும்.


கண்டுபிடிப்பு 
கொலை

அந்த புகைப்படத்தில் பிரிட்னி வயிற்றில் பெல்ட் ஒன்று கட்டி இருக்கிறார். அதில் இருக்கும் வளையமும் கொலைக்கு பயன்படுத்திய கயிற்றின் வளையமும் ஒன்றாக இருந்துள்ளது. இதை வைத்து இந்த கொலையை செயன் ரோஸ் அண்டோனிதான் செய்தது என போலீஸ் கண்டுபிடித்தது.


தண்டனை 
7 ஆண்டு தணடனை

முதலில் இந்த கொலையை ஒப்புக் கொள்ள அந்த பெண் மறுத்துள்ளார். பின் போதையில் செய்துவிட்டதாக கூறியுள்ளார். சண்டை காரணமாக அவர் இப்படி செய்து இருக்கிறார். தற்போது இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் என்ன ஆனார் தெரியுமா