பொங்கல் விழாவில் ரூபவாகினிக்கு எதிராக அரங்கிற்க்குள் புலிக்கொடி ஏந்துவோம்

கனடியத் தமிழ் காங்கிரசு நடத்தும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள சிறீலங்கா அரச ஊடகமான ரூபவாகினி தொலைக்காட்சி அழைக்கப்பட்ட விடயம் குறித்து இதுவரை கனடியத் தமிழர் பேரவையினரிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில் தமிழ்த்தாய் மன்றம் மற்றும் மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமைய அங்கத்தவர்களான நாம், நிகழ்வு நாளன்று அரங்கினுள் நுழைந்து அமைதியான முறையில் எமது தேசிய அடையாளமான தமிழீழத் தேசியக்கொடியைத் தாங்கிநின்று எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக முடிவு செய்துள்ளோம். ஆகையால் நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டினை ஏற்கனவே பெற்ற நிலையில் செல்லவுள்ள உணர்வாளர்களையும் மற்றும் தமிழ்த்தாய் மன்ற, மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமைய உறுப்பினர்களையும் தமிழீழத் தேசியக் கொடியுடன் நிகழ்வு நாளன்று வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

அமைதியான முறையில் எமது தேசிய அடையாளத்துடன் நிகழ்வு அரங்கினுள் நுழைந்து நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் எமது மக்களின் மன உணர்வுகளை எதிரொலித்து நிற்போமாக. நுழைவுச்சீட்டுகள் தேவைப்படும் எமது மன்ற அங்கத்தவர்கள் தொடர்புகொள்ளவும்.

- தமிழ்த்தாய் மன்றம் , மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமையம்

காதலியை திருமணம் செய்த பிரபல கனேடிய நடிகை ரசிகர்கள் வருத்தம்