50 வருடங்களுக்கு பின்னர் கனடாவில் அதி தீவிர குளிர்

கனடாவில் நேற்று(28) வியாழக்கிழமை காலை வரலாறு காணாத அதி தீவிர குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான குளிர் நிலவியதாக அந்நாட்டு காலநிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

ரொறொன்ரோ மற்றும் கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று(29) 22.9 குறைந்த வெப்பநிலை நிலவுகின்றது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 1960 ஆம் ஆண்டில் இதுபோன்று 18.9 என்ற குறைந்த வெப்பநிலை நிலவியதாக கனடிய காலநிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வீதியில் பலத்த காற்று மற்றும் உறைபனியினாலும் ஆபத்து ஏற்படலாம் என வாகன சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய குடும்பம், நண்பர்கள் மற்றும் அயலவர்களையும் வீட்டு செல்லப்பிராணிகளையும் கவனத்தில்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் அமைப்பு தொடர் குளிர் காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டில் அதிகளவில் கழுவி ஊற்றப்பட்ட அரசியல் பிரபலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா