கனடாவிற்கு அகதிகளாக படையெடுக்கும் ஹைதி மக்கள்

ஹைதி நாட்டின் மக்கள் தொகையில், பாதி பேர் கனடாவிற்கு அகதிகளாக படையெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில், கனடாவிற்கு சென்றுள்ள ஹைதி மக்களில் 14,467 பேர் அகதி அந்தஸ்து வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்

இது ஹைதியின் மொத்த மக்கள் தொகையில் பாதியாகும். குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் கனடாவில் சட்ட விரோதமாக குடியேறிய 6,304 ஹைதி குடிமக்கள், அகதி அந்தஸ்து கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், அவற்றில் வெறும் 298 பேரின் கோரிக்கைகளை மட்டுமே இறுதி செய்துள்ளதாகவும், அதிலும் 29 பேரின் கோரிக்கைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், நல்ல நிலையில் உள்ள ஹைதியர்கள், அமெரிக்காவில் இருந்து சட்ட விரோதமாக கனடாவில் குடியேற முயலுவதாக குடிவரவு அமைச்சர் அகமது உசைன் தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு வருபவர்கள் முதலில் புகலிடம் தேவைப்படுபவர்களாகவும், பாதுகாப்பு தேவைப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவை விட ஹைதி மக்கள் தான் கடந்த ஒன்பது மாத காலத்தில் கனடாவில் அகதிகளாக குடியேறியவர்கள் ஆவர்.

ஹைதியில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலில் 742 பேர் உள்ளனர் என கனடாவின் Border Services Agency தெரிவித்துள்ளது.

பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்னை பற்றி அறிவது எப்படி?