கனடியர்களிடம் மன்னிப்பு கேட்க போகும் ஜஸ்டின் ட்ரூடோ அரசு: ஏன்?

கனடாவில் வாழும் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றவர்களிடம் தனது அரசு மன்னிப்பு கேட்கும் என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கையர்கள் அரசு வேலைகள், மிலிட்டரி பணிகள் போன்ற பொது விடயங்களில் பல்வேறு விதமான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

இதோடு பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இதையடுத்து இவர்களிடம் கனடா அரசு வரும் 28-ஆம் திகதி மன்னிப்பு கோரும் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நவம்பர் 28-ஆம் திகதி அரசாங்கம் கனடாவில் வாழும் LGBTQ2 (ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள்) யிடம் அவர்கள் துன்புறுத்தப்பட்டதற்கும், அநியாயங்களை அனுபவித்ததற்கும் மன்னிப்பு கேட்கும்.

சமத்துவம் மற்றும் எல்லோரும் ஒன்று சேர்த்துக்கொள்வதற்கான பாதையில் ஒன்றாக முன்னேறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Justin Trudeau @JustinTrudeau

On November 28, the Government will offer a formal apology to LGBTQ2 Canadians in the House - for the persecution & injustices they have suffered, and to advance together on the path to equality & inclusion.

12:44 AM - Nov 20, 2017

கோடிக்கணக்கான சொத்தை தானம் செய்த அக்கா: உருக்கமான நிகழ்வு