இவர்களை கண்டீர்களா? தேடிவரும் ரொறொன்ரோ பொலிசார்!

11-மாத வயதுடைய குழந்தை மற்றும் அவனது தாய் இருவரையும் ரொறொன்ரோ பொலிசார் தேடுகின்றனர். டவுன்ஸ்வியுவிற்கு அருகில் இவர்கள் கடைசியாக காணப்பட்டனர்.

வியாழக்கிழமை பிற்பகல் குறிப்பிட்ட பகுதியில் காணப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

23-வயதுடைய கைலா சென்.லூயிஸ் அவரது மகன் செவொன் சென்.லூயிஸ் ஆகிய இருவரும் வியாழக்கிழமை பிற்பகல் 2-மணியளவில் செப்பேர்ட் அவெனியு மற்றும் அலன் வீதி பகுதியில் காணப்பட்டனரென கூறப்பட்டுள்ளது.

மருத்துவ கவலைகள் மற்றும் வீட்டு பிரச்சனைகள் காரணமாக இவர்களை தேடவில்லை எனவும் குழந்தையின் நலன்கருதியே தேடுவதாகவும் 32-வது டிவிசன் ஊழியர்கள் சார்ஜன்ட் சிபி 24-விற்கு தெரிவித்துள்ளார்.

சென். லூயிஸ் 5.2-உயரம் நீல/கிரே கண்கள் மற்றும் சிவப்பு நிற முடி கொண்டவர்.கடைசியாக காணப்பட்ட போது இருண்ட நிற காற்சட்டை மற்றும் ஜீன் ஜக்கெட் அணிந்திருந்தார்.

ஷெவொன் நீலம் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட ஒட்டு மொத்த ஆடை அணிந்திருந்தான்.
தகவல் தெரிந்தவர்கள் 416-808-3200 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.