அடுத்து என்ன நடக்குதோ..? "500, 2000 நோட்டுகளை 50 ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.." தமி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அந்த  மாவட்ட மக்கள் மட்டுமின்றி அந்த தகவல் காட்டுத்தீ போல பரவி மற்ற மாவட்ட மக்களும் பீதிக்குள்ளாகி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்ததுடன், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நோட்டுகள் ஏ.டி.எம். மையங்களில் கிடைப்பதற்கு நான்கு மாதங்கள் பிடித்தது.

இதற்கிடையே, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்த போதிலும் இதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியாகவில்லை.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக அண்மையில் புதிய 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் மற்றும் ரவுண்டானாவில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை 50 ரூபாய்களை மாற்றி கொள்ளுங்கள் என்று மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டாரால் பொதுமக்கள்  மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சில்லரை பிரச்சினையை குறைக்கும் வகையில் புதிய வடிவிலான 50 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

அதை மட்டும் மையப்படுத்தி ஏன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்று பீதியுடன் பார்த்தவாறே செல்கின்றனர்.

அஜித் படத்தில் ஆரவ்?