1 ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்த 9 பேர்.... ஒரு பால் கூட பிடிக்காமல் வெற்றி பெற்ற அணி.... கிரிக

பி.சி.சி.ஐ., நடத்திய 19வயதுகுட்பட்ட  பெண்களுக்கான  உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வெறும் இரண்டு ரன்களுக்கு ஒரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ள அதிசயம் நடைபெற்றுள்ளது.

பெண்களின் திறமையை வெளிக்கொண்டு வர பி.சி.சி.ஐ., நடத்தும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் கேரளா – நாகலாந்து அணிகள் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நாகலாந்து அணியின் துவக்க வீராங்கனையான மேனகாவை(1) தவிர அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் வெளியேறினர்.

17 ஓவர் வரை நீடித்த இந்த இன்னிங்ஸில் 1 எக்ஸ்ட்ரா ரன்னுடன் சேர்த்து மொத்தம் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்தது.

இதனையடுத்து களமிறங்கிய கேரளா அணிக்கு பேட்டிங்கிலும் வேலை  கொடுக்க விரும்பாத நாகலாந்து வீராங்கனைகள் முதல் பந்தையே  ஓயிட் பவுண்டரி போட்டுக்கொடுத்து கேரள அணியை வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.