கொல்கத்தா டெஸ்டில் பரபரப்பு... அவுட்டிலிருந்து தப்பிக்க இலங்கை வீரர் செய்த மோசடி!

கொல்கத்தா: இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ருவான் பெரேரா மோசடி செய்து அவுட் ஆவதில் இருந்து தப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் நடுவேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

அப்போது 57வது ஓவரில் இலங்கை வீரர் தில்ருவான் பெரேரா பேட் செய்தபோது, கள நடுவரால் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது.

முதலில் அப்பீல் இல்லை 
டிஆர்எஸ் கேட்கவில்லை

இதையடுத்து டிஆர்எஸ் எனப்படும் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறைக்கு போகலாமா என பெரேரா யோசித்தார். எதிர் முனையில் நின்றிருந்த சக பேட்ஸ்மேன் ரங்கனா ஹீரத்திடம் கேட்டார். அவரோ வேண்டாம் என சைகை செய்தார். இதையடுத்து பெவிலியன் நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார் தில்ருவான் பெரேரா.


டிஆர்எஸ் கேட்டார் 
சைகை சிக்னல்

தில்ருவான் பெரேரா பெவிலியன் நோக்கி நடந்தபோது, பெவிலியனில் இருந்த சக ஆட்டக்காரர்களில் ஒருவர், ரிவ்யூ செய்யுமாறு சைகை காட்டியதாக தெரிகிறது. உடனே திரும்பிய தில்ருவான் பெரேரா டிஆர்எஸ் ரிவ்யூ செய்யுமாறு நடுவரிடம் முறையிட்டார். ரிவ்யூவில் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.


ஆஸி. வீரர் 
ஸ்டீவ் ஸ்மித் இப்படி செய்தார்

இந்த சம்பவம், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் செய்கையை பிரதிபலித்தது. இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் அவரும் பெவிலியனை பார்த்து டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டார். ஆனால் கள நடுவர் அதற்கு மறுத்துவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நினைவு மழுங்கி அந்த பக்கம் பார்த்துவிட்டதாக ஸ்மித் சமாளித்திருந்தார்.


தில்ருவான் மீது தப்பில்லை 
இலங்கை அணி மறுப்பு

ஸ்டீவ் ஸ்மித் செய்ததை போலவே இப்போது தில்ருவான் பெரேராவும் தவறிழைந்துள்ளது தெரியவந்துள்ளபோதிலும், இதை இலங்கை கிரிக்கெட் அணி மறுத்துள்ளது. தில்ருவான் பெரேரா எந்த ஒரு சிக்னலையும் பார்த்து ரிவ்யூ கேட்கவில்லை என்று அது தெரிவித்துள்ளது.

அஜித்திற்கு அடுத்து விஐய் இல்லை இவர்தான்! பரபரப்பு தகவல்?