கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்......அதிரடியாக 200 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு!

இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக எழுந்த கடுமையான எதிர்ப்பு சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஏற்பட்ட நட்டம் ஆகியவற்றை  கவனத்தில் கொண்டு ஜி.எஸ்.டி கவுன்சில் பல பொருட்களுக்கான வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 150 முதல் 200 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்படுகின்றன. குறிப்பாக எலக்ட்ரிக்கல், கட்டுமானம், பர்னிச்சர் போன்றவற்றின் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட உள்ளது.

18 சதவீதமாகவுள்ள பெரும்பாலான பொருட்களின் மீதான வரி குறைக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள சேவைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்று சிறு தொழில் உற்பத்தி பொருட்கள் மீதான வரியும் குறைய உள்ளது. அதோடு வரி கணக்கு தாக்கல் செய்வதை அனைத்து நிறுவனங்களுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதும் என்று அறிவிப்பார்கள் எனவும் தெரிகிறது.

தாமத கட்டணம் தற்போது உள்ள ரூ.200 ஐ ரூ.50 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக 28 % வரி விதிக்கப்பட்டுள்ள பொருட்கள், சேவைகளில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் அசாமின் தலைநகரான  கவுகாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்று தெரிகிறது.

கடலில் இறந்து மிதந்த 26 இளம்பெண்கள் : சாவுக்கான உண்மையான காரணம்?!