தல 59 படத்தில் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் நடிக்கிறாரா? அவரோ சொன்ன பதில்

தல அஜித் விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக்கை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கிய வினோத்துடன் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி அஜித்தின் பிறந்த நாளான மே மாதம் ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்கு தேர்வு தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலின் தல 59 படத்தில் நடிக்கப்போவதாகவும், இதை அவரே சொன்னதாகவும் செய்தி தீயாக பரவியது.

இதையடுத்து இது குறித்து அவர் கூறுகையில், நான் அதை நிகழ்ச்சி ஒன்றில் காமெடிக்காக சொன்னேன், அஜித் சாருடன் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.