விஸ்வாசம் படத்தில் இப்படி ஒரு connection உள்ளதா அம்மோவ்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் வெளியாகி யூடியூபையே திணறடித்து வருகிறது.

லைக்ஸ், பார்வையாளர்கள் என அனைத்திலும் புதிய சாதனைகள் செய்துள்ளது. இதனால் ரசிகர்களும், படக்குழுவும் செம ஹேப்பி.

இப்பாட வரிகளை எழுதிய விவேகா பாடல் வரிகள் குறித்து பேசியிருந்தார். அப்போது பாடலில் மங்காத்தா என வார்த்தை வருகிறதே என்று கேட்டதற்கு, இந்த வார்த்தையை பற்றி சிவா அவர்களிடம் கூறியபோது, இது வந்து அப்டி பத்திக்கும் என்றார்.

இதில் மற்றொரு அர்த்தமும் உள்ளது. அஜித் அவர்களின் படத்தின் ஒரு ரெபரன்ஸும் இருக்கிறது என்று கூறியுள்ளார். வழக்கமாக மற்ற நடிகர்கள் படங்களில் தான் அஜித் ரெபரன்ஸ் இருக்கும், இப்போது அவரது படத்திலேயே ஒரு ரெபரன்ஸா. அது என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.