நாளை அஜித் ரசிகர்களுக்கு பீக் சர்ப்ரைஸ் :பிரபலம் போட்ட டுவிட்

விஸ்வாசம் பட டீசர் மற்றும் ட்ரெய்லரை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு நாளை ஒரு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று பிரபல திரையரங்க நிர்வாகி தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான்.

ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர், ட்ரெய்லர் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரோகிணி திரையரங்கின் நிர்வாக அதிகாரி நிகிலேஷ் சத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், அஜித் ரசிகர்களுக்கு நாளை ஒரு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

Nikilesh Surya@NikileshSurya

Sweet Surprise for fans tomorrow @RohiniSilverScr

4,173

12:25 PM - Dec 5, 2018 · Fort Tondiarpet, India

Twitter Ads info and privacy

1,591 people are talking about this

Twitter Ads info and privacyஇந்த ட்வீட் ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், படத்தின் சிங்கிள் ட்ராக், டீசர் மற்றும் ட்ரெய்லரில் ஏதேனும் ஒன்று நாளை வெளியாகிறதா என்ற கேள்வியை அஜித் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. எனவே நாளை முதல் பாடல் வெளியாக அதிகம் வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.