பொங்கல் ரேஸில் வின்னர் யார் ரஜினியா , அஜித்தா .. கருத்துக்கணிப்பு இதோ..!!!

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 நவம்பர் 29 ரிலீஸ் என அறிவித்துள்ளார். தற்போது ரஜினியின் "பேட்ட" திரைப்படமும் பொங்கல் ரேஸில் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு எகுறுகிறது. படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். எப்படியும் படத்தின் டீஸர் மட்டும் பாடலை டிசம்பருக்குள் ரிலீஸ் செய்துவிடுவர்.

 

இதை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டம் போட வாய்ப்புள்ளது. படத்தை ஏப்ரல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டாலும், படத்தின் 90 சதவிகிதம் முடிந்ததால் கண்டிப்பாக படம் பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒருவேளை படம் பொங்கலுக்கு வந்தால் அஜித்தின் விஸ்வாசம் கண்டிப்பாக தள்ளி போட வாய்ப்பில்லை ஏனென்றால் ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் என்று தள்ளிப்போன படம் பொங்கலை டார்கெட் செய்வதால் ரஜினியுடன் அஜித் முதன்முறையாக மோத நேரிடும்.

 

அப்படி பார்த்தால் அஜித்தின் அசூர பலம், ரஜினியின் ஸ்டார் வேலியு இரண்டிற்கும் எது ஜெயிக்கும் என்பது கொஞ்சம் யூகிக்க முடியாமலே இருக்கிறது.  இதற்க்கு நடுவில் சிம்புவின் "வந்தா ராஜாவாதான் வருவேன்" திரைப்படம் வருகிறது . எது எப்படியோ இரண்டுபடங்களுக்கு நடுவில் சூர்யாவின் கே.வி. ஆனந்த் படம் வரமால் தப்பித்தால் சரி.