சீனாவிற்கு எதிராக ஜப்பானை களமிறக்கும் அமெரிக்கா.. ஆசியாவில் உருவாகும் புது எதிரிகள்.. பதற்றம்!

டோக்கியோ: அமெரிக்காவுடன் ஜப்பான் பாதுகாப்பு துறை செய்ய உள்ள போர் விமான ஒப்பந்தம் சீனாவை அச்சமடைய வைத்து இருக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் அமைதி பாதைக்கு திரும்பியது. லிட்டில் பாய், பேட் பாய் என்ற இரண்டு அணு குண்டுகளை தாங்கி எழுந்த ஜப்பான் வேகமாக உலகின் நம்பர் 2 நாடாக மாறியது.

இப்போது ஜப்பானின் வளர்ச்சி குறைந்து 3வது இடத்திற்கு சென்றுள்ளது. மாறாக சீனா ஆசியாவின் வலுவான நாடாக மாறியுள்ளது.

சில 
சில பிரச்சனை

சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் வெளிப்படையாக பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறுகிறார்கள். தென்கொரியாவின் கடல் பகுதியை பிடிப்பதில் ஜப்பானும் சீனாவும் பெரிய அளவில் சண்டையிட்டு வருகிறது.

 

வாங்குகிறது 
வாங்க முடிவு

இந்த நிலையில்தான் டிசம்பர் மாதம் இறுதியில் பெரிய ராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஜப்பான் செய்ய இருக்கிறது. அதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஸ்டெல்த் ரக விமானங்கள் 120, ஹெலிகாப்டர்கள் 85, மற்றும் விடிஓஎல் ரக விமானங்கள் 100ஐ வாங்க முடிவெடுத்து இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

 

என்ன 
பெரிய பலம்

இது ஜப்பான் ராணுவத்திற்கு சீனாவின் ராணுவத்தை விட பெரிய பலம் அளிக்கும். விடிஓஎல் ரக விமானங்கள், எந்த இடத்தில் இருந்தும் செங்குத்தாக மேலே சென்று பறக்க கூடியது. இதனால் கடலில் எளிதாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஸ்டெல்த் ரக விமானங்கள் எதிரி நாட்டின் ரேடாரில் தெரியாமல், சென்று தாக்க முடியும். இதைத்தான் ஜப்பான் வாங்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

 

கோபம் 
கடும் கோபம்

இதனால் சீனா தற்போது ஜப்பான் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. கடல் சார்ந்த போருக்கு தயாராகவே ஜப்பான் இப்படி செயல்படுகிறது என்று சீனா கூறியுள்ளது. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் ஜப்பானை அமெரிக்கா வளர்ப்பதாக உலக அரசியல் வல்லுநர்கள் பேசிக்கொள்கிறார்கள்.