பிரித்வி ஷா, ரிஷப் பண்ட்டுக்கு பகிரங்க மிரட்டல்!! சின்ன பசங்கனு நெனச்சு பயமுறுத்தி பார்க்கும் ஆஸ்திர

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடுவதால் அது அந்த அணிக்கு சாதகமாக அமையும். மேலும் இந்திய அணியை போலவே அந்த அணியிலும் திறமை வாய்ந்த பல இளம் வீரர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரூ டை, ஸ்டேன்லேக் உள்ள சிறந்த பவுலர்கள் உள்ள நிலையில், இந்திய அணியிலும் முன்னெப்போதையும் விட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் என மிரட்டலான வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளது இந்திய அணி.

 

 

இந்திய அணி பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே சமபலம் வாய்ந்த வலுவான அணியாக திகழ்கிறது. பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி ஆகிய இளம் திறமைசாலிகள் இந்திய அணியில் உள்ளனர். தொடக்கத்திலேயே எதிரணியை அதிரடியால் தெறிக்கவிடக்கூடிய பிரித்வி ஷா, மிடில் ஆர்டரில் அதிரடியை கையாளும் ரிஷப் பண்ட், நிதானமாக ஆடும் ஹனுமா விஹாரி என இந்திய அணி மிகச்சிறந்த இளம் திறமைகளை கொண்டுள்ளது.

 

 

இங்கிலாந்தில் அறிமுக போட்டியில் சிக்ஸருடன் ரன் கணக்கை தொடங்கிய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே அபார சதமடித்த பிரித்வி ஷா என இந்திய அணி மிரட்டலான இளம் வீரர்களை கொண்டுள்ளது. மேலும் கோலி, ரோஹித், புஜாரா, முரளி விஜய், ராகுல், ரஹானே போன்ற அனுபவசாலிகளையும் இந்திய அணி கொண்டுள்ளது. எனவே இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி, இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய அணி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட வலுவான அணியாக திகழ்கிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியிலும் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் அவர்கள் இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள்; குறிப்பாக இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய சூழலில் ஆஸ்திரேலிய பவுலர்கள் கடும் சவால் அளிப்பார்கள். சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் அதிகம். எனவே ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்தான் என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.