உங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு? இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா?

முன்னெல்லாம் நமக்கு இந்த கெமிஸ்ட்ரி பத்தி ஒண்ணுமே தெரியாது. சயின்ஸ் பாடப் புத்தகத்துல நிறையா பேருக்கு மண்டையில ஏறாதது தான் கெமிஸ்ட்ரினு நெனச்சுட்டு வந்தோம்.

எப்ப நிறையா டிவி சேனல்கள்ல டான்ஸ் நிகழ்சிகள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சதோ, அப்ப தான் இந்த நடுவர்கள் மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்லி, சொல்லி உறவுளையும் கெமிஸ்ட்ரி, பாண்டிங், கெமிக்கல் ரியாக்ஷன் எல்லாம் இருக்குன்னு சொல்லிக் கொடுத்துட்டு போனாங்க.

சரி! கெமிஸ்ட்ரினா என்ன? சும்மா, கட்டிபிடிச்சு ஆடுறது, ரொமான்ஸ் பண்றதா?

ஒரு உறவுல கெமிஸ்ட்ரி கரக்டா வர்க்கவுட் ஆச்சுனா, அவங்க லைப்ல சந்தோசமும் பெருகி வழியும். ஒருவேள, எதிர்பாராத விதமா கெமிஸ்ட்ரில ரியாக்ஷன் எக்குத்தப்பா ஆபோசிட் ரியாக்ஷன் ஆயிடுச்சுன்னா விரிசல் பெருசாயிடும், இல்ல... ரிசல்ட் புட்டுக்கும். ஆமா! இந்த கெமிஸ்ட்ரி கரக்டா இருந்தா காதல் செட்டாகுமா?

உடல் ரீதியான கெமிஸ்ட்ரி எப்படி வர்க்கவுட் ஆகுது, கெமிஸ்ட்ரினால உண்டாகுற நன்மைகள் என்ன? இதுக்கும் காதலுக்கும் எதாச்சும் ஒற்றுமை இருக்கா? வாங்க நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்...

பாயிண்ட் நம்பர் #1

உண்மையில ஒரு ஆண், பெண்ணுக்கு நடுவுல உருவாகுற கெமிஸ்ட்ரிக்கு அவங்க முதல் சந்திப்பு, அந்த சந்திப்புல அவங்க ரெண்டு பெருக்கும் நடுவுல ஏற்பட்ட தாக்கம் மிக பெரிய ரோல் ப்ளே பண்ணுதாம்.

அதனால, ஒரு நபர் கூட சரியா, பக்காவா கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆகணும்னா, முதல் சந்திப்பு நல்ல படியா நடக்கணும். நாம, விரும்புற அந்த நபருக்கு நம்ம மேல நல்ல அபிப்பிராயம் ஏற்படணும்.

 

இனிமை!

ஒருவேளை, அந்த நபர் மேல உங்களுக்கு ஈர்ப்பு இல்ல, நீங்க எதையும் எதிர்பார்க்காம சாதரணமா தான் பார்க்க போறீங்கன்னாலும். அந்த முதல் சந்திப்பு இனிமையா துடங்கி, முடிஞ்சதுன்னா, பிற்காலத்துல கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆக உதவும். ஆகையால, முதல் சந்திப்பு தான் நல்லதொரு கெமிஸ்ட்ரிக்கு முதல் படி.

 

ஏதாவது ஒண்ணு...

இந்த முதல் சந்திப்புல உங்களுக்குள்ள காதல் பெருக்கெடுத்து ஓடாம இருந்தாலும். வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குறது, மண்டைக்கு மேல லைட் எறியிறது, மணி அடிக்கிறதுன்னு ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டிருக்கும். ஆனா, நீங்க அத சரியா நோட்டீஸ் பண்ணாம விட்டிருப்பீங்க.

சப்போஸ், ஒரு நபர் கூட பின்னாட்கள கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆச்சுன்னா, நீங்க ஆரம்பத்துல முதல் சந்திச்சிக்கிட்டப்ப, அந்த சந்திப்பு எப்படியானதா இருந்துச்சு, உங்களுக்குள்ள பட்டாம்ப்பூச்சி, லைட்டு, மணி எல்லாம் தென்பட்டுச்சான்னு க்ராஸ் செக் பண்ணிக்கிங்க.

 

பாயிண்ட் நம்பர் #2

இந்த உடல் ரீதியான கெமிஸ்ட்ரின்னு எடுத்துக்கிட்டாலே அதுல கலவுதல் இல்லாம இருக்காது. ஏன்னா, இதோட கருவே அதுதான். ஒரு அட்ராக்ஷன், கவர்ச்சி எல்லாம் கலந்தது தான் இது. ஒருத்தர கிஸ் பண்ணும் போது கட்டிப்பிடிக்கும் போது நிச்சயமா இந்த கெமிஸ்ட்ரியில கெமிக்கல் பாண்டிங் ரியாக்ட் ஆகுறத நாம உணர முடியும்.

 

டவுட்டா?

என்னப்பா கிஸ் பண்ணா, கடிப்பிடிச்சா கண்டிப்பா ரியாக்ஷன் வர தானே செய்யும்னு நீங்க கேட்கலாம். ஒரு வாழ்த்து சொல்லி நண்பர்கள், தோழிகள் எல்லாருமே கட்டிப்பிடிக்கலாம். எல்லார் மேலயுமா நமக்கு ரியாக்ஷன் ஏற்படுது? இல்லவே.. இல்ல. நமக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ நாம ஈர்க்கப்பட்ட அந்த நபர் கட்டிப்பிடிக்கும் போதுதான் இந்த கெமிஸ்ட்ரி வெளிப்பட துவங்கும்.

 

கலவுதல்!

இந்த கெமிஸ்ட்ரி வெளிப்பட்ட எதுல போய் முடியும். இதுவொரு சிறந்த கெமிஸ்ட்ரினு எத வெச்சு முடிவு பண்ண முடியும்? இதோட ரிசல்ட் எத வெச்சு தெரிஞ்சுக்கிறது? ஒருவேளை உங்க லவ்வர் இல்ல மனைவி கூட கெமிஸ்ட்ரி பக்காவா இருக்குன்னு வெச்சுக்குங்களே.. உங்களுக்குள்ள நடக்குற எல்லா கலவுதல் செஷனும் ரெண்டு பேருக்குமே சௌகரியமா, திருப்தியானதா அமைஞ்சிருக்கும். கெமிஸ்ட்ரி ரெண்டு பேருக்குள்ள பர்பெக்டா இருக்குன்னு இத வெச்சு தான் தெரிஞ்சுக்க முடியும்னு... நிபுணர்கள் சொல்றாங்க.

 

பாயிண்ட் நம்பர் #3

ஒரு ஜோடிக்கு நடுவுல கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்குன்னு வெச்சுக்குங்களே.. அவங்க ஒருத்தர், ஒருத்தர் சேர்ந்து இருக்கும் போது கை சும்மாவே இருக்காதாம். உடனே தப்பா எடுத்துக்க வேணாம். கைக்கோர்த்து இருப்பாங்க, ஆசையா, கொஞ்சிக்குவாங்க, கைலயே பேசிக்குவாங்க, சைகை காமிச்சுக்குவாங்க. பொது இடங்கள்ல கூட இவங்க கொஞ்சம் நெருக்கமா தான் காணப்படுவாங்க.

எனவே, இதெல்லாம் வெச்சு... ரெண்டு பேர்க்கு நடுவுல கெமிஸ்ட்ரி பக்காவா மேட்ச் ஆகியிருக்குன்னு கண்டுப்பிடிச்சிடலாம்.

 

பாயிண்ட் நம்பர் #4

இங்க நீங்க புரிஞ்சுக்க வேண்டிய, தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயமே இதுதான். இந்த கெமிஸ்ட்ரி இருந்துட்டா உறவு நிலைச்சு ஆரோக்கியமா இருக்கும்னு நெனச்சுக்க வேணாம். இது வெறும் உடல் ரீதியான கெமிஸ்ட்ரி. இதுக்கு காதல், திருமணம் ஆகிய உறவு நிலை எல்லாம் இருக்கனும்கிற அவசியமே இல்ல.

 

யாரா வேணாலும் இருக்கலாம்...

ஒண்ணா வர்க் பண்றவங்க, ஃபிரெண்ட்லியா பழகுறவங்க, ஏன் ஸ்ட்ரேஞ்சர்ஸ் மத்தியில கூட இந்த கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆகலாம். இதுவெறும் கலவுறவுக்கான நன்மையா மட்டுமே தான் இருக்கும். ஆகையால, இந்த கெமிஸ்ட்ரி பக்காவா இருந்தா தான் அது நல்ல உறவா இருக்க முடியும்னு தப்புக் கணக்கு போட்டுட வேண்டாம்.

 

கவலைய விடுங்க!

இந்த கெமிஸ்ட்ரியானது உடலுறவு சிறப்பா இருக்க உதவுமே தவிர, நிலையான உறவு அமைய உதவுமானா? அது பெரிய கேள்வி குறி தான். ஒருவேளை, காதலிக்கிற ஜோடி, கணவன் - மனைவி உறவுல இந்த கெமிஸ்ட்ரி சிறப்பா இருந்தா, அதுக்கு பேரு தான் ஜாக்பாட்!

நீங்க ஒரு சரியான நபரோட உறவுல இருந்தீங்கனாலே கெமிஸ்ட்ரி ஸ்ட்ராங்கா தான் இருக்கும். எனவே, கவலைய விடுங்க மக்கா!