12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் அனுஷ்கா இணையும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

சென்னை: மாதவன் அனுஷ்கா இணையும் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் மாதவனும் அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அத்திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கும் இத்திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அனுஷ்கா மாதவன் கூட்டணியில் 2006 ஆம் ஆண்டு ரெண்டு திரைப்படம் வெளியானது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளனர்.

விக்ரம் வேதா திரைப்படத்தில் கலக்கிய பிறகு ஒரு இடைவெளி விட்ட மாதவன், தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் பயோபிக் படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்ற பிறகு 'சைலன்ஸ்' பட வேலைகள் ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது.