பாதி வயது காதலன்.. வயிற்றில் அவர் கொடுத்த குழந்தை.. அடுத்து கல்யாணம்.

சிட்னி: நம்ம ஊரில் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்துவிட்டாலே 'ஆண்ட்டி' என்று இளசுகள் பெரும்பாலும் சொல்வது வழக்கமாகி விட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் ஆண்ட்டியைதான் கல்யாணம் செய்ய போகிறார்.

டினா ஜாக்சன் என்பவர்தான் அந்த பெண்மணி. இவருக்கு வயது 45. கடந்த 2013-ம் ஆண்டு பிராண்டன் என்ற 24 வயது இளைஞரை டினா சந்தித்தார். சந்திப்பு லவ்-ஆக மாறியிருக்கிறது. லவ் நெருக்கமாகி அது டினா கர்ப்பம் தரிக்கும்வரை கொண்டுவந்து விட்டுவிட்டது.

21 வயது குறைவு 
ஜாலி கிடையாது

தன்னைவிட 21 வயது குறைவான ஒரு இளைஞரால் டினா கர்ப்பமானதால் இளைஞருக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. ஆனால் டினாவுக்கும் சந்தோஷம்தான்.ஆனால் இளைஞர் அளவுக்கு துள்ளி குதிக்கிற அளவுக்கு ஜாலி கிடையாது.

 

9 குழந்தை 
குழந்தை பிறந்தது

ஏன் தெரியுமா? டினாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி 9 குழந்தைகள் இருக்கிறார்கள். இது 10-வது குழந்தை. இந்த குழந்தையும் கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் பிறந்தது.

 

ரொம்ப சின்ன வயசு 
இனிமே கல்யாணம்

45 வயது டினா, 21 வயது குறைவான இளைஞரை சந்தித்து முடித்தாயிற்று... லவ் பண்ணியாச்சு... ஏடாகூடம் ஆகி குழந்தையும் பிறந்தாச்சு. இப்போ என்னன்னா, இனிமேதான் இவங்களுக்கு கல்யாணமே ஆக போகுதாம். இதைபற்றி டினா சொல்லும்போது, தன் 3 பிள்ளைகளைவிட பிராண்டன் ரொம்ப சின்னவராம்.

 

அம்மா-பையன் 
அடுத்தது கல்யாணம்

எங்களை யார் பார்த்தாலும் அம்மா-பையன் என்று நினைத்துவிடுகிறார்களாம். இதனால ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்ததாம். அப்பறம் அதுவே போக போக பழகி போச்சாம். இனி டினாவின் முதல் வேலை என்னவென்றால், தன் குழந்தை குட்டிகளை உட்காரவைத்து தனக்கு எப்போ கல்யாணம் என்று பேசி முடிவெடுப்பதுதானாம்!!