சீன குகைகளில் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கண்டுபிடிப்பு! ஏலியன் ஆதாரமா?

1937ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளரான சீபூ டை என்பவர் சீனாவின் குன்லுன் கேட்டி என்ற மலையில் தங்குமிடத்தை கண்டறிய முயற்சிக்கும்போது, கண்டெடுக்கப்பட்ட கற்கள் இந்த விநோதமான காணொளியில் காண்பிக்கப்படுகிறது.

குகைகளில் நுழைந்த அந்த குழுவினர், அதன் சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகளை கண்டு வியந்தனர். அந்த குகையின் பின்புறத்தில், 1 மீட்டருக்கும் அதிக நீளமில்லாத, விசித்திரமான தோற்றத்தை கொண்ட எலும்புகூடுகள் உள்ள பல்வேறு சமாதிகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

அந்த சமாதிகளில் விவரிக்க முடியாத கலைநயம் பொருந்திய 700 க்கும் மேற்பட்ட அபூர்வ வட்டுகளும் சேர்த்து புதைக்கப்பட்டிருந்தன.

தற்போது எதோ ஒரு கதையை விவரிக்கும் முயற்சியாக இந்த காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளியை பதிவிட்ட யூடியூப் சேனல் கூறுகையில், 12000ஆண்டுகளுக்கு முன்பு வேற்றுகிரவாசிகளின் விண்கலம் விழுந்து நொறுங்கிய இடம் இது என்பதையே இந்த வட்டுகள் உணர்த்துகின்றன என்கின்றனர். 2000 பின்பு இந்த கற்கள் அப்படியே விட்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் விசித்திரமான சிறு வடிவங்களை பற்றி வர்ணனையாளர் விவரிக்கையில், அது ட்ரோபா பழங்குடிகளின் சந்ததியினராக இருக்கலாம் என்கிறார்.

ட்ரோபா பழங்குடியினர்கள் 4 அடிக்கு மேல் உயரம் இல்லாத நூற்றுக்கணக்கான குள்ளர்கள் கூட்டம் என கூறப்படுகிறது. மேலும் இந்த குகைகளில் ஏலியன் சமூகம் வாழ்ந்திருக்கலாம் எனவும் அந்த காணொளி விளக்குகிறது. தற்போது கிடைத்திருக்கும் வட்டுகளின் மூலம் ஏலியன்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளமுடியும்.

இந்த யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் வைரலாகி, ஏராளமானோர் இதுபற்றி கருத்துதெரிவித்து வருகின்றனர்.

"நம்மால் புரிந்துகொள்ள முடியாத வடிவில் அந்த வட்டுகளில் ஏராளமான தகவல்கள் புதைந்துள்ளன என்பதை என்னால் அடுத்து கூற முடியும்" என ஒருவர் பதவிட்டுள்ளார்.

"இது கண்கவரும் வகையில் இருக்கிறது" என்கிறார் மற்றொருவர்.

"இது நிச்சயம் உங்களை ஏலியன் பற்றி ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்கும்" என்கிறார் வேறொருவர்.