பிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா

சென்னை: பிக் பாஸுக்காக யாஷிகா செய்த காரியம் பற்றி தெரிய வந்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் ஏகத்துக்கும் பிரபலமான யாஷிகா பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் யாஷிகாவுக்கு தான் வயது மிகவும் குறைவு.

வயதில் சிறியவராக இருந்தாலும் மெச்சூராக நடந்து கொண்டார் அவர்.

நோட்டா 
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் யாஷிகா மூன்று காட்சிகளில் தலையை காட்டிவிட்டு சென்றார். அந்த மூன்று காட்சிகளை பார்த்தே அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம் என்று ஃபீல் பண்ணினார்கள்.

பிக் பாஸ் 
யாஷிகா

நோட்டா படத்தில் யாஷிகாவுக்கு பெரிய கதாபாத்திரம் தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டியதால் நடிக்க நேரம் இல்லை என்று கூறி படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம் யாஷிகா. அதனால் தான் கவுரவத் தோற்றம் என்ற பெயரில் 3 காட்சிகளில் மட்டுமே வந்துள்ளார்.

 

அடல்ட் காமெடி 
கதாபாத்திரம்

அடல் காமெடி படத்தில் நடிக்க ஆசைப்பட்ட யாஷிகாவுக்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட வாய்ப்பு கிடைத்தது. இனியும் அது போன்ற படங்களில் நடிக்க அவருக்கு இஷ்டம் இல்லையாம். திருடி, தீவிரவாதி, புற்று நோயாளி, விவசாயி வீட்டு பெண் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறாராம் யாஷிகா. அரசியல் சார்ந்த படங்களில் நடிக்க தயாராக உள்ளார் அவர்.

 

நிஜ வாழ்க்கை 
படம்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவர்ச்சியாக, சுட்டித்தனமாக நடித்ததால் நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படி தான் என்று முடிவு செய்யக் கூடாது. என் உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டவே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.