மோடி வாங்கி வந்ததே திருட்டு சிலைதான்? எச்.ராஜா

எச்.ராஜா எப்போதும் சர்சையான கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட நீதிமன்றத்தையும், காவல்துறையையும் பற்றி அவதூறாக பேசி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார். 
 
 
இந்நிலையில், அவர் தற்போது கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா வந்த போது மோடிக்கு இரண்டு சிலைகளை பரிசளித்தார். 
 
இதில் எச்.ராஜா தற்போது கூறுவது என்னவென்றால், பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே, அதைத்தான் மோடி பரிசாக வாங்கிக்கொண்டார் என தெரிவித்துள்ளார். 
 
இதனால், வழக்கம் போல் இணையவாசிகள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். அதாவது, எச்.ராஜா சொல்லிவிட்டார் மோடி மீதும், ஆஸ்திரேலிய பிரதமர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேலி செய்து வருகின்றனர்.