பிரதமர் மோடிக்கு ஐநா கொடுத்த சாம்பியன் விருது

பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதில் இருந்து இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற வேண்டும் என்ற அவரது முயற்சி தொடர்ந்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தை பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை அவர் கொண்டு செல்கிறார்.

இந்த நிலையில் சுற்றுச்சுழலில் அதிக ஆர்வம் காட்டி வரும் பிரதமர் மோடிக்கு ஐநாவின் சிறப்பு விருது ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்புக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு

தெரிவித்த ஐநா, அவருக்கு 'சாம்பியன் ஆஃப் தி எர்த்' என்ற விருதினை அளித்து கெளரவப்படுத்த முடிவு செய்துள்ளது.
 

பிரதமருக்கு ஐநாவின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாஜகவினர் உற்சாகமாகி இந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்துள்ளது.