நான் உங்களுக்கு தான் பிறந்தேனா? விஜயகுமாரை ஷாக் ஆக்கிய வனிதா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமார். இவர் மட்டுமல்ல இவரது மனைவி மஞ்சுளா உட்பட குடும்பமே பல வருடங்களாக சினிமாவில் நடித்துவருகின்றனர்.

இந்த தம்பதிக்கு அருண் விஜய், வனிதா, ப்ரித்தா, ஸ்ரீதேவி என 4 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் வனிதாவுடன் மட்டும் எப்போதும் குடும்பத்துடன் சண்டையிட்டுவருகிறார். சமீபத்தில் இவரை மஞ்சுளாவின் பெயரில் உள்ள வீட்டிலிருந்து விஜயகுமார் போலிஸை வைத்து வெளியேற்றினார்.

இதுபற்றி வனிதா கூறுகையில், என் மீது மட்டுமே எப்போதும் குடும்பமே காழ்ப்புணர்ச்சியில் உள்ளது.

நான் உங்களுக்குத்தான் பிறந்தேனா என்று அப்பாவிடமே அம்மா முன்னாடியே கேட்டேன். எங்க அம்மா ஒன்றும் பேசமுடியாமல் இருந்தார்கள்.

எங்க அம்மா இறக்கும்வரையில் அப்பா அமைதியாக இருந்தார். ஆனால் இறந்தபின்பு என்னை ஒதுக்கத்தொடங்கிவிட்டார்.

என்னுடைய அம்மா வீட்டில் தான் வசித்தேன். நான் சொத்தில் உரிமை கேட்கவில்லை. ஆனால் வசிக்கக்கூடாது என்று கூறுவதை தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.