தன்னை தானே திருமணம் செய்து கொண்ட அழகிய இளம் தேவதை: இப்படியொரு காரணமா?

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

லிண்டா டொக்டர் என்ற பெண் கடற்கரை பகுதியில் தனது மூன்று நெருங்கிய தோழிகளை வைத்து கொண்டு தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

வெள்ளை நிற ஆடையில் தேவதையாக ஜொலித்த லிண்டா, கையில் பூங்கொத்தை வைத்து கொண்டு மணப்பெண்ணாகவே காட்சியளித்தார்.

இது குறித்து லிண்டா கூறுகையில், என் தோழி இ.ஜே என்பவர் உறவுமுறை ஆலோசகராக உள்ளார், அவர் தான் எனக்கு இந்த ஐடியாவை கொடுத்தார்.

நான் என் மீது வைத்துள்ள அன்பை கெளரவிப்பதற்கான ஒரு நிகழ்வாக இத்திருமணத்தை பார்க்கிறேன்.

நான் என் மீது வைத்துள்ள உறவுமுறை தான் மிக முக்கிய உறவுமுறையாக கருதுகிறேன்,

சுய அன்பு மற்றும் ஆன்மீகத் தன்மையை உணர்ந்து கொள்ளவும் இந்த திருமணம் எனக்கு உதவும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.