கருணாநிதி ஜாதகத்தில் என்னென்ன யோகம் இருக்கு தெரியுமா

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதே தொண்டர்களின் பிரார்த்தனையாக உள்ளது. கருணாநிதி ரிஷப ராசி கடக லக்னக்காரர். இவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்று சூரியனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். இவரது ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளதை பார்க்கலாம்.

லக்னாதிபதி சந்திரன் உச்சம். சந்திரனைப் போல மாற்றம் நிறைந்த அரசியல் வாழ்க்கை. சூரியனுடன் சந்திரன் சேர்க்கை. 2 ஆம் இடத்தில் ராகு 8ல் கேது. சுக்கிரன் 12ஆம் இடத்தில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். மறைவாக இருந்தாலும் ஒருவித கவர்ச்சி கருணாநிதியை சுற்றி அமர்ந்துள்ளது. புதன், சுக்கிரன் இணைந்து 12ஆம் இடத்தில் இணைந்திருப்பது எழுத்து துறையில் வெற்றியாளராக திகழ்வதை பார்க்க முடிகிறது.

கருணாநிதியின் மூளையே சொத்து. செவ்வாய் மகரத்தில் அதாவது 7வது இடத்தில் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். கடக லக்னம் என்பதால் தோஷம் இல்லை. செவ்வாய் ரத்தத்திற்குக் காரகர். நோய் எதிர்ப்பு சக்திக்கு காரகர். செவ்வாய் லக்னத்தை பார்க்கிறார். இதனாலேயே இளம் வயதில் புரட்சியாளராக போராளியாக வாழ்ந்து அரசியலில் நுழைந்தவர் கருணாநிதி. செவ்வாய் உச்சம் என்பதால் முன்கோபம் அதிகம்.

ரிஷப ராசி கடக லக்னம் 
பாசக்கார தலைவர் கருணாநிதி

ரிஷப ராசிக்காரர் என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை. தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம் அவர்களை இவர் மீது அன்பையும், பாசத்தையும் அதிகரித்துள்ளது. ஆயுள் ஸ்தானதிபதியும் அஷ்டமாதிபதியுமான சனிபகவான் 4ல் அமர்ந்து உச்சம் பெற்றுள்ளார். ஆனால் சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஆயுள் அதிகரித்துள்ளது.

 

ருசக யோகம் 
கோபக்கார தலைவர்

ஜாதகத்தில் செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருக்கிறார். அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக திகழ்ந்தவர். திடமான உடல் நீண்ட ஆயுள் 90 வயதுக்கு மேல் வாழ்வார்கள். 95 வயதை தாண்டியும் தொண்டர்களிடம் பிரியம் குறையாமல் இருக்கிறார் கருணாநிதி.

செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோருக்கும் கோபம்தான். அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.

 

சச மஹா யோகம் 
சுறுசுறுப்பான தலைவர்

சனி கேந்திரத்தில் உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படும். இவரது ஜாதகத்தில் சனி நாலில் உச்சம் பெற்றிருக்கிறார். ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 95 வயதை தொட்டிருக்கிறார். நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை. சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர். வயதானாலும் சுறு சுறுப்புக்கு பஞ்சமில்லாத தலைவராக திகழ்ந்தவர்.

 

கஜகேசரி யோகம் 
சமூகத்தில் மதிப்பு

இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள். சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல். பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல். சமூகத்தில் மதிப்பு,மரியாதையை பெற்றுத்தந்துள்ளது.

 

குபேர யோகம் 
பிள்ளைகள் வசதி

நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது. லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது. குருபகவான் விருச்சிகத்தில் இருக்க, சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம் உண்டானது. இதனால் குபேர சம்பத்து ஏற்பட்டது. பிள்ளைகளும் குபேரர்களாகத்தான் இருக்கின்றனர்.