ரம்யாவை கிழித்து தொங்கவிட்ட சினேகன் காரணம் இது தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி 35 நாட்களை கடந்துவிட்டது. கொஞ்சம் போர் என சொல்லும் படி தான் அண்மைகாலமாக அதில் விசயங்கள் இடம் பெற்று வருகிறது. ஆனால் கமல்ஹாசன் வரும் நாட்கள் ஒரே குஷி தான்.

அண்மையில் சிறப்பு விருந்தினாராக பிக்பாஸ் சீசன் 1ன் வெற்றியாளர் கவிஞர் சினேகன் பிக்பாஸால் சீசன் 2 க்கு வரவைக்கப்பட்டார். போட்டியாளர்களுக்கு தமிழ் வகுப்பு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் வெளியே வரும் நேரத்தில் அவருடன் பாடகி ரம்யா மற்றும் பலர் கலந்துரையாடினர். அவரும் யாருமே உண்மையாக இல்லை என ஓப்பனாக சொல்லிவிட்டார்.

அவர் போன பின் சினேகனை தாக்கி வைஷ்ணவி, ரம்யா ஆகியோர் பேசினர். தற்போது அவர் அதற்கு அண்மையில் கொடுத்த பேட்டி மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

ரம்யாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அவர் கேட்டதற்கு நான் பதில் சொன்னேன். அவர்களை கேட்டு நான் வரவில்லை. பிக்பாஸ் அனுப்பினார். அதனால் வந்தேன் என கூறினார்.