அவங்க கெடக்கறாங்க தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் உறுதியாக கிடைக்கும்: தலைமை நீதிபதி

கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல என்றும், தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

'உச்சநீதிமன்றத்தின் இந்த கூற்று காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என்ற நம்பிக்கையை தருகிறதா? இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறதா?' என்ற கேள்வியை மக்களிடத்தில் முன்வைக்கையில், "தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் இந்த போராட்டமே வந்திருக்காது.

உச்ச நீதிமன்றம் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை விட்டுவிட்டு, மத்திய அரசு வார்த்தை ஜாலங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

தமிழர்களின் வாழ்வாதார அடிப்படை உரிமையில் பங்கம் ஏற்படுத்தி ஒரு முழு வடிவ அரசியல் முன்னெடுப்பை செய்வதற்கு அடித்தளம் இட்டுவருகிறது, கலகம் என்ற கொள்கையோடு வலம் வருது மத்திய அரசு" என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ