குடிக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க இவர்கள் செய்த பலே ஐடியா

மதுவை ஒழிக்க நினைத்த கேரள கிராமத்தினர் செய்த மிக வித்யாசமான செயல்

சமீபத்தில் வெளியான செய்தி கேரள மக்கள் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் தங்களுக்கு சாதி, மதம் இல்லை என சுமார் 1.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கேரள மாநில கல்வித்துறை மந்திரி சி. ரவீந்திரநாத் சமீபத்தில் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார். இதே போல சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி பல முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி எடுத்துக்காட்டாக இருக்கிறது. நமக்கெல்லாம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லி தொடர் போராட்டங்கள், மறியல்கள் எல்லாம் நடத்தி எக்கச்சக்க பிரச்சனைகளை சந்திக்கிறோம்.

Image Courtesy

ஆனால் சத்தமேயில்லாமல் அதனையும் மாற்றி காண்பித்திருக்கிறார்கள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தூர் பஞ்சாயத்தின் கீழ் இருக்கிற மரோடிச்சல் என்ற கிராமம்.

உன்னி கிருஷ்ணன் :

மரோடிச்சல் கிராமத்திற்கு சென்று உன்னிகிருஷ்ணன் என்று பெயரைக் கேட்டால் சிறிது நேரம் யோசிக்கிறார்கள். எந்த உன்னிகிருஷ்ணன் என்ற சந்தேகத்தில் பதிலே சொல்லாமல் தவிர்க்கிறார்கள். ஆனால் செஸ் உன்னிகிருஷ்ணன் என்று சொன்னால் உடனேயே உற்சாகம் பொங்க அவர் இருக்கும் இடத்திற்கு அடையாளம் சொல்லி அனுப்புகிறார்கள்.

இன்னும் சிலரோ கூடவே வந்து அவரிடம் அறிமுகப்படுத்தி விட்டும் செல்கிறார்கள்.

அடையாளம் :

பின்ன... இந்த கிராமத்திற்கே புது அடையாளம் தந்தவராயிற்றே, மக்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? எல்லாரும் அவரை உரிமையாக மாமன் என்று தான் அழைக்கிறார்கள்.

எந்த நேரத்திற்கு அவரைப் பார்க்க சென்றாலும் உங்களை சாப்பிட விடாமல் அனுப்ப மாட்டார் அந்த அளவிற்கு பாசம். அதே நேரத்தில் இன்னொரு கேள்வியையும் கேட்டுவிடுவார்.

செஸ் :

செஸ் விளையாட்டில் ஆர்வம் உண்டா ? என்பது தான். செஸ் விளையாட்டு கற்றுக் கொடுக்க சொல்லியோ அல்லது விளையாட்டில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் செஸ் உன்னி கிருஷ்ணனை நீங்கள் அணுகலாம்.

அந்த கிராமத்திலிருந்து முதன் முதலில் செஸ் கற்றுக் கொண்டது, விளையாடியது இந்த உன்னி கிருஷ்ணன் தான்.

பாபி ஃபிஷ்சர் :

அப்போது உன்னிகிருஷ்ணனுக்கு பதினாறு வயதிருக்கும் போது செய்திகளில் பரபரப்பாக பாபி ஃபிஷ்சர் பெயர் அடிபடிகிறது. தொடர்ந்து தேடும் போது அவர் செஸ் போட்டியின் கிராண்ட் மாஸ்டர் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.

தொடர்ந்து அந்த விளையாட்டின் மீது உன்னிக்கு ஆர்வம் மேலோங்குகிறது. தொடர்ந்து தானும் செஸ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.

சதுரங்கம் :

தன் ஊரிலிருந்து பக்கத்தில் இருக்கும் டவுன் பகுதிக்குச் சென்று இதனை கற்றுக் கொள்கிறார். தீடிரென்று எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்கையில், பள்ளிக்காலத்திலிருந்து மற்ற சிறுவர்களைப் போல எனக்கும் ஓடியாடி விளையாட தான் விருப்பம். ஆனால் நாங்கள் வசிப்பது மிகச்சிறிய கிராமம். இங்கே குழந்தைகள் விளையாட பெரிய மைதானம் எல்லாம் ஒன்றுமே இருக்காது.

இது தான் என் மைதானம் :

அதோடு எல்லா இடங்களிலும் ரப்பர் மரங்களே நிறைந்திருக்கும். மரத்திற்குள் புகுந்து புகுந்து தான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டியதாய் இருக்கும் . இந்த சூழ்நிலையில் எப்படி விளையாடுவது. அந்த எரிச்சலோ என்னவோ செஸ் விளையாட்டை தேர்ந்தெடுக்க வைத்தது. இதை விளையாட மிகப்பெரிய இடமோ அல்லது பெரிய பட்டாளமோ தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் நீங்கள் உட்கார்ந்து விளையாடலாம்.

நீங்களும் உங்களுக்கு போட்டியாக விளையாட இன்னொருவரும் இருந்தால் போதுமானது. அதுவே உங்கள் மைதானமாக மாறிடும்.

போதை :

1970 மற்றும் 80களில் இந்த கிராமத்து ஆண்களின் பிரதான தொழிலே சாராயம் காய்ச்சுவது தான். அதனாலேயே பலரும் குடிக்கு அடிமையாகி இருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக குடி போதைக்கு அடிமையானவர்களினால் கிராமத்தில், குடும்பத்தில் பல இடைஞ்சல்கள் வர ஆரம்பித்தன.

முடிவு :

அப்போது நானும் என்னுடன் சேர்ந்து சில நண்பர்களும் ஒரு முடிவுக்கு வந்தோம். எங்கள் கிராமத்தை காப்பாற்ற வேண்டுமென்று சொன்னால் முதலில் இவர்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். பின்னர் மொத்தமாக இந்த மதுவை ஒழிக்க வேண்டும் என்று சபதமெடுத்தோம்.

என்ன செய்யலாம்.... என்று எல்லாரும் சேர்ந்து விவாதித்தோம்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ