மீண்டும் ஒரு போராட்டம் எழும் காவிரியை மீட்போம் என தமிழ் இளைஞர்கள் விடும் சவால்

தொலைபேசி எண் உட்பட அனைத்தும் இலவசம்! - REGISTER NOW

தமிழகத்தில் இனி நாங்கள் எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் நம்பவில்லை..  விரைவில் இறங்குகிறோம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை காட்டிலும் மேலாக !.,

இன்று மாணவர் மற்றும் இளைஞர்கள் கூறுகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் கூட நாங்கள் உடனே  இறங்கவில்லை. ஏனென்றால் அரசியல் கட்சி தலைவர்கள் தானாக போராடுவதால் அது கிடைத்திடும் என நினைத்தோம்.

ஆனால் அது கிடைக்காததால் தான் குடும்பம் முழுவதும் ரோட்டில் வந்து போராடினோம். ஜல்லிக்கட்டு வெற்றி என்பது தனிமனிதர்கள் ஒன்று கூடி வீரப்போராட்டம் செய்து வாங்கிய சுதந்திரம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு கொடுத்ததும் காலம் தாழ்த்துவது எங்களை கிள்ளி பார்ப்பது போல் உள்ளது.

இனி நாங்கள் பொறுக்கமாட்டோம் தயவு செய்து எங்களை சோதிக்காதீர்கள் என கூறுகிறார்கள் இளைஞர்கள். 

விவசாயத்தை காக்க, காவிரியை மீட்க இனி ஒரு பொழுதும் தாமதிக்க மாட்டோம் என தமிழ் உணர்வுள்ள மாணவ மற்றும் இளைஞர்கள் குமுறுகின்றனர். 

இது அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் கடைசி வாய்ப்பு. அதிகாரத்தில் உள்ளவர்கள் தலையிட தயங்கினாள், அதிகாரத்தை கையில் எடுக்க நங்கள் தயார் என உறுதியுடன் கூறுகின்றனர் தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள். 

வாருங்கள் .... விவசாயத்தை காப்போம், உலகுக்கே உணவளிப்போம்...!!!

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ