பிரபல நடிகையை காதலிக்கும் மைக்கேல் ஜாக்சன் மகள் வைரலான லிப் டூ லிப் போட்டோ

நியூயார்க்: மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் பிரபல ஹாலிவுட் நடிகையை காதலித்து வருகிறாராம்.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் நடிகையாகவும், மாடலாகவும் உள்ளார். அவர் ஹாலிவுட் நடிகை காரா டெலிவிஞ்சை காதலிக்கிறாராம்.

இருவரும் சேர்ந்து ஜோடியாக ஊர் சுற்றுகிறார்களாம்.

பாரிஸ் 
துன்பம்

14 வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பாரிஸ் ஜாக்சன் 15 வயதில் தற்கொலைக்கு முயன்றார். தற்போது 18 வயதாகும் அவர் இதுவரை 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

காதல் 
காரா

பாரிஸ் ஜாக்சன் 25 வயதாகும் ஹாலிவுட் நடிகை காரா டெலிவிஞ்சை காதலிக்கிறாராம். மேற்கு ஹாலிவுட் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் வாசலில் பாரிஸ் மடியில் காரா அமர்ந்திருந்ததை பலரும் பார்த்துள்ளனர்.

 

முத்தம் 
அன்பு

பாரிஸ் ஜாக்சனும், காராவும் பொது இடத்தில் வைத்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முத்தம் கொடுத்த பிறகு இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளனர்.


லண்டன் 
விருது

கடந்த ஆண்டு நடந்த எம்டிவி பட விருது விழாவில் தான் பாரிஸும், காராவும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் கை கோர்த்து லண்டன் நகரில் சுற்றியுள்ளனர். பாரிஸ் காராவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கலை என்று தெரிவித்துள்ளார்.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ