ரொம்ப வருஷமா ஒரே மாதிரி நடிக்கிற அந்த நடிகரை மாத்த சொல்லுங்க விஜய்சேதுபதி கடுகடு

நல்ல நடிகர், நல்ல மனிதர் என்று பலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சிலநேரங்களில் தான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களை ஒத்த வேடங்களை  ஏற்று நடிக்கிறார்.

இது குறித்து பிரபல பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிகிறீர்களே என்ற கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி ” முடிந்த வரை வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். ஆனால், சில படங்களில் தவிர்க்க முடியாமல் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் அமைந்துவிடுகின்றன.

மேலும், இந்த மாதிரி கேள்வியெல்லாம் என்கிட்டே தான் கேக்குறீங்க. பல வருஷமாக ஒரே மாதிரி நடிச்சுகிட்டு இருக்க நடிகர்கள் கிட்ட ஏன் இந்த கேள்வியை கேட்க மாட்டேங்குகிறீங்க..! அவங்களை மாத்த சொல்லுங்க என்று சிரித்துகொண்டே கடுகடுவென பதிலளித்துள்ளார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ