2 சாய்ஸ் கொடுத்த மோடி தமிழகம் என்ன செய்ய போகிறது

மத்திய அரசு 2018-19 பட்ஜெட் அறிக்கையில் மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஆண்டு பிரீமியம் தொகை 2,000 ரூபாயாக வைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. இத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு வருடம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும்  என பட்ஜெடில்  அறிவிக்கப்பட்டது.

Image result for central health insurance

மேலும்  2,000 ரூபாய் தொகையை மத்திய மாநில அரசுகள்  60 : 40 அளவில் பங்கீடு செய்யபட்டுள்ளது. இத்திட்டத்திற்கு Ayushman Bharat-National Health Protection Mission என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

Image result for Ayushman Bharat-National Health Protection Mission

இதில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இரு வாய்ப்புகளை கொடுத்துள்ளது.அதன்படி மத்திய அரசின் திட்டத்தில் சேர்ந்துகொள்வது இல்லையெனில் மாநில அரசு தனிப்பட்ட முறையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது.இப்படி வாய்ப்புகளைக் கொடுக்க முக்கியக் காரணம், சில  மாநிலங்களில் மத்தியஅரசை விட முன்னோடியான மாநில அரசுகள் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

Image result for Ayushman Bharat-National Health Protection Mission
மத்திய அரசு இதனை அறிவித்த உடன்  மேற்குவங்கம் இத்திட்டத்தில்  தான் சேரப்போவதில்லை என் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதற்கு பதிலாக அம்மாநில அரசு தனிப்பட்ட முறையில் காப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது.

Related imageஆந்திரவில் என்டிஆர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால்,மத்திய அரசு  எப்படி இக்காப்பீட்டை இணைக்கப்போகிறது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த திட்டத்தில் தமிழகம் இணைக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது .

Image result for Rashtriya Swasthya Bima Yojana

இதற்குமுன் ஒரு  சில மாநிலங்களில் Rashtriya Swasthya Bima Yojana திட்டத்தில் 30 ரூபாய் பிரிமியம் மூலம் 30,000 ரூபாய் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது Rashtriya Swasthya Bima Yojana திட்டம் நீக்கப்படும்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ