தவறு செய்தால் அனைவர் முன்பும் அடிப்பேன் ஆர்யா அபர்ணதியிடம் கூற காரணம்

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஆர்யா தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், தன்னை விரும்பும் பெண்களை ஒரு இணையத்தில் பதிவிடுமாறு கூறினார் ஆர்யா.

அதைப்போலவே நிறைய பெண்கள் அவர் கூறிய இணையத்தில் அவர்களின் முழு விவரங்களை பதிவுசெய்துள்ளார்கள். அதில் ஆர்யாவிற்கு பிடித்த 16 பெண்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அண்மையில் தான் ஷியாம், பரத் மற்றும் கலையரசன் என ஆர்யாவின் நண்பர்கள் சிலர் வந்து கலந்துகொண்டார்கள்.

அதைப்போலவே நேற்று ஆர்யாவின் நண்பர் என சாந்தனு மற்றும் கீர்த்தி கலந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் அபர்ணதியுடன் பேசும்போது, அவரை துன்புறுத்தும்விதமாக பேசிவிட்டார்கள். மேலும், ஆர்யாவும் அபர்ணதியை தவறு செய்தால் அனைவர் முன்னிலையிலும் அடிப்பேன் என்று கூற வருத்தமடைந்த அபர்ணதி, நிகழ்ச்சியிலேயே அழுத்துவிட்டார். இது அபர்ணதியை ஆதரிக்கும் சிலருக்கும் கோபத்தை கொடுத்துள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ