பீர் பாட்டிலுக்குள் இருந்ததை பார்த்து அடிச்ச போதையே தெளிஞ்சு போச்சு குடிமகன்களுக்கு அதிர்ச்சி

யார் குடி எங்கு கெட்டாலும் அரசுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பற்ற விபரீத சிந்தனையின் வெளிப்பாடு தான் தமிழக அரசு எடுத்து நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனம். தமிழக அரசின் மது சிந்தனையை மாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது.

மக்களுக்கு கேடு விளைவிக்கும் செயலிலும் தற்போது முறைகேடு நடந்து வருவது மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் பாம்பு ஒன்று செத்து மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரி பட்டணத்தில் உள்ள டாஸ்மாக் கடையில்  ஒருவர் பீர் வாங்கி அருந்தி உள்ளோர் . அப்போது பாட்டிலின் உள்ளே சிறிய பாம்பு ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இதனையடுத்து, பீர் பாட்டில் உள்ளே பாம்பு இருந்த தகவல் அங்கிருந்த அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடை முன்பு கூடி கடையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

உடனடியாக இது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட பின்னர், கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குடிமகன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேற்றினர்.

வெளியே இவ்வளவு நடந்தும் மது போதையில் இருந்த சிலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, இறுதியாக பீர் பாட்டிலில் பாம்பு இருந்தது என்பதை புரிந்து கொண்ட சிலருக்கு அடித்த போதையே தெளிந்து போனது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ