மக்கள் நீதி மய்யத்தில் நடிகர் விஷால்

நடிகர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சியில் பல திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் இணைந்து வரும் நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் அவரை திடீரென்று சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கமல் மற்றும் ரஜினிகாந்துக்கு முன்பாகவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு நேரடி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விஷால், தான் விரைவில் அரசியலில் ஈடுபடுவேன் என்று அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், அவர் நேற்று மாலை திடீரென்று நடிகர் கமல் ஹாசனை, மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பா? அல்லது சினிமாத்துறை சம்பந்தமான சந்திப்பா? என்று பல கேள்விகள் எழுந்தன.

 

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விஷால் வட்டாரத்தில் கேட்டபோது, டிஜிட்டல் சேவை கட்டணம் தொடர்பாக பட அதிபர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக நடிகர் விஷால், கமல்ஹாசனிடம் எடுத்து கூறியதாகவும், வேலைநிறுத்தத்துக்கு தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என்றும் விஷால் தெரிவித்ததாகவும், கூறப்படுகிறது. அதே சமயம், தற்போதைய அரசியல் குறித்தும் இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ கீழே