இந்த ஒரு காரணத்தால் தான் ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் தல

‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள புதிய படம் ‘விசுவாசம்’. சிவா இயக்கவுள்ள இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கை மார்ச் 23-ஆம் தேதி துவங்கவுள்ளனர். படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து அஜித்தின் 59-வது படத்தை இயக்குவதற்கு ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் வினோத்தும், ‘விக்ரம் வேதா’ பட புகழ் புஷ்கர்-காயத்ரியும், அஜித்திடம் ஒன்-லைன் சொல்லியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அஜித் - வினோத் கூட்டணி அமைக்கவிருக்கும் படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

இது தொடர்பாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்த போது “பரவி வரும் இச்செய்தி உண்மை தான். போனி கபூர் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்தது. ஆனால், சமீபத்தில் ஸ்ரீதேவி மரணமடைந்ததால் தற்போது அஜித் – போனி கபூர் கைகோர்ப்பதை உறுதியாக கூற முடியாது” என்று தெரிவித்துள்ளனர். ஆகையால், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்த படம் புலி. இப்படத்தில் ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது.

இந்நிலையில் புலி படத்திற்காக ஸ்ரீதேவிக்கு ரூ 3 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம், இந்த சம்பளம் தனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் தற்போது என அஜித்திடம் ஸ்ரீதேவி கூறினாராம்.

இதை கேட்ட அஜித் இவ்வளவு பெரிய நடிகைக்கு இப்படி ஒரு பண நெருக்கடியா, என்று தல மிகவும் வருத்தப்பட்டதாக பிரபல வார இதழில் குறிப்பிட்டுள்ளனர்.அதனால் தான் தற்போது கணவருக்கு இந்த வாய்ப்பு