நெஞ்சு வலியால் துடித்த பிரபல நடிகர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வந்தவர் நரேந்திர ஜா. ஷாருக்கானின் ரயீஸ், ரித்திக் ரோஷனின் காபில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்திலும் நடித்துள்ளார் நரேந்திர ஜா.

பண்ணை வீடு 
மாரடைப்பு

நரேந்திர ஜா மும்பைக்கு அருகில் உள்ள வாதா பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் தனது மனைவியுடன் ஓய்வு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

 

நரேந்திர ஜா 
3வது முறை

55 வயதான நரேந்திர ஜாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் மரண செய்தி அறிந்து பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

நெஞ்சு வலி 
மரணம்

சாருக்கு எந்த உடல்நலக்குறைவும் கிடையாது. நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு எங்களுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். காலை 4 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று நரேந்திர ஜாவின் டிரைவர் லக்ஷ்மண் சிங் தெரிவித்தார்.


சோனு சூத் 
இரங்கல்

நரேந்திர ஜா இறந்த செய்தி அறிந்த பாலிவுட் நடிகர் சோனு சூத் ட்விட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


ஹன்சல் மேத்தா 
அதிர்ச்சி

என்ன ஒரு அதிர்ச்சி, நரேந்திர ஜா? இந்த தொழில் கொல்கிறது என்று இயக்குனர் ஹன்சல் மேத்தா ட்வீட்டியுள்ளார்.