அஜித் ரசிகர்கள் செய்யும் சமூக விழிப்புணர்வு பணி மலேசியாவில் கொண்டாட்டம்

கோலாலம்பூர் : நடிகர் அஜித்துக்கு பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 'பில்லா' படத்துக்குப் பிறகு மலேசியாவில் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் வருடாவருடம் 'ஃபுட்சால்' என்ற விழிப்புணர்வு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

மலேசியா அஜித் நல்லெண்ண ரசிகர் மன்றம் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வருடமும் வரும் மார்ச் 24-ம் தேதி இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ரசிகர்கள் 
அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்துக்கு பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். 'பில்லா' படத்துக்குப் பிறகு மலேசியாவில் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. மலேசியா அஜித் நல்லெண்ண ரசிகர் மன்றம் என்ற பெயரில் மலேசியாவில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார்கள்.

கால்பந்து போட்டிகள் 
விழிப்புணர்வு போட்டிகள்

அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பில் வருடாவருடம் அங்குள்ள இளைஞர்கள், 'ஃபுட்சால்' என்கிற ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

 

விளையாட்டு போட்டி 
பரிசுகள்

வரும் மார்ச் 24-ம் தேதி நடக்கும் இந்தப் போட்டியில் 30 வயதுக்குள் உள்ளவர்கள் பதிவுசெய்துகொண்டு பங்கு பெறலாம். பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 21 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பல பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


மக்கள் நலன் 
ஊக்கப்படுத்தும் விதமாக

சமூக நலனுக்காக மலேசியா அஜித் ரசிகர்கள் இதுபோன்ற போட்டியை உருவாக்கி விளையாட்டு ஆர்வலர்களுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.