இன்று பூமிக்கு வருகிறது சூரிய புயல் செயற்கை கோள்கள் செயலிழக்கும் அபாயம்

சூரியனின் புறப்பரப்பில் பெரிய அளவிலான நெருப்புக்குழம்புகள் உருவாகியுள்ளதாகவும்,  அது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக சக்தியுடன் பூமியையே தாக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் , இன்று சூரிய புயல் பூமியை கடுமையாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது மேலும் இவ்வாறு நடைபெற்றால் அது இயற்கையை சீர்குலைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 

பூமியை தாக்கும் முன் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் செயலிழப்பு அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளும் தடைபட வாய்ப்பு உள்ளது, மேலும் உலகின் பல இடங்களில் மின்சார துண்டிப்பும் இருக்கும் என கூறப்படுகிறது.