நடிகையின் அம்மாவால் பிரபல டிவி சீரியலுக்கு வந்த பிரச்சனை

மும்பை: 16 வயது நடிகையால் டிவி சீரியல் குழுவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சீரியலான து ஆஷிகியில் 16 வயது சிறுமி ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி நடித்து வருகிறார். கதைப்படி அவருக்கும், ரித்விக் அரோராவுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் உண்டு.

இருவரும் நெருங்கி முத்தம் கொடுக்கும் காட்சிகளை வைக்க திட்டமிட்டனர்.

அம்மா 
எதிர்ப்பு

16 வயது பச்ச மண்ணை போய் முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்வதா என்று ஜன்னத்தின் அம்மா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இயக்குனர் குழம்பிப் போனார். சாதாரண பேச்சாக ஆரம்பித்து அது வாக்குவாதத்தில் போய் முடிந்துள்ளது.

 

முத்தம் 
ஜன்னத்

ஜன்னத்தின் வயதை கருதி அவருக்கு ஏற்றதுபோன்று நெருக்கமான காதல் காட்சிகளை எடுத்துள்ளனர். தயாரிப்பாளர்கள் கொடுத்த பிரஷரால் இந்த காட்சியில் ஜன்னத் நடிக்க அவரின் அம்மா ஒப்புக் கொண்டாராம்.

 

வேறு நடிகை 
தயாரிப்பாளர்கள்

ஜன்னத்தை வைத்து காதல் காட்சிகளை படமாக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் அவரை நீக்கிவிட்டு வேறு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.


முடிவு 
மாற்றம்

ஹெல்லி ஷா, தான்யா சர்மா மற்றும் பூஜா பானர்ஜியை ஜன்னத் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜன்னத் தொடர்ந்து அந்த சீரியலில் நடிப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.