அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் திடீரெ பதவி நீக்கம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனை அவரது பதவியிலிருந்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.

அவருக்கு பதிலாக தற்போது அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் மைக் போம்பியோ புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது :- தற்போது சிஐஏ இயக்குநராக உள்ள மைக் போம்பியோ இனி நாட்டின் வெளியுறவுத் துறை அதிபராகப் பொறுப்பு வகிப்பார். வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் மிகச் சிறந்த முறையில் செயல்படுவார் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் சிஐஏ-வின் துணை இயக்குநராகப் பொறுப்பு வகித்து வரும் கினா ஹாஸ்பெல் அந்த அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.