சரியாக மார்ச் 18-ல் தாக்கப்படுவோம் பின்னர் பல விபரீதங்களை சந்திப்போம் ஏன் எதனால்

அறிவியல் வார்த்தைகளின்கீழ் நாம் ஒரு மிகப்பெரிய காந்த புயலை எதிர்கொள்ளப்போகிறோம். தி ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி வருகிற மார்ச் 18 அன்று கூறப்படும் காந்த புயலானது நமது பூமியை தாக்கும். முதலில் அது பூமி கிரகத்தின் பூகோளமயமான சூழலை (மண்ணியல் சூழ்நிலை- geomagnetic atmosphere) பாதிக்கும்.

பூமிவாசிகளே முதலில் உங்களை நீங்களே ஆசுவாசப் படுத்திக்கொள்ளுங்கள். நமது கிரகத்திற்க்கான தேவைகளை ஒளிசக்தி வழியாக பூர்த்தி செய்து வந்த சூரியன் இந்த வார இறுதியில் நமக்கு முற்றிலும் தேவையில்லாத ஒன்றை வெளிக்கிடப்போகிறது.

அறிவியல் வார்த்தைகளின்கீழ் நாம் ஒரு மிகப்பெரிய காந்த புயலை எதிர்கொள்ளப்போகிறோம். தி ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி வருகிற மார்ச் 18 அன்று கூறப்படும் காந்த புயலானது நமது பூமியை தாக்கும். முதலில் அது பூமி கிரகத்தின் பூகோளமயமான சூழலை (மண்ணியல் சூழ்நிலை- geomagnetic atmosphere) பாதிக்கும். பின்.?

தகவல்தொடர்புகளை தகர்க்கும்.!

பின்னர் தொடர்ச்சியான முறையில், பல சிக்கல்களை நாம் எதிர்கொள்வோம். காந்த புயல்கள் பொதுவாக தொலைத்தொடர்பு அமைப்புகளை உடைக்கும் வல்லமை கொண்டவைகளாகும். அதாவது ரேடியோ தகவல்தொடர்புகளை தகர்க்கும், ரேடார் அலைவரிசைகளை இடைமறிக்கும் மற்றும் ரேடியோ வழிசெலுத்தல் முறையை பாதிக்கும்.

மனித உடல்நல கோளாறு.!

ஸ்பேஸ்டெய்லி.காம் (spacedaily.com) அறிக்கையின்படி நாம் எதிர்கொள்ளப்போகும் இந்த காந்த புயலானது, இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் மற்றும் அட்ரினலின் சுரப்பு அதிகரிப்பு ஆகிய மனித உடல்நலகோளாறுகளையும் ஏற்படுத்தும். இதன் அர்த்தம் உயிரினங்களும் பாதிக்கப்படும்.

தலைவலி, தலைச்சுற்று மற்றும் தூக்க தொந்தரவு.!

மேலும் மார்ச் 18 அன்று பூமியை தாக்கும் காந்த புயலால் உலகெங்கிலும் உள்ள சிலருக்கு தலைவலி, தலைச்சுற்று மற்றும் தூக்க தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக டெனொப்கீக்.காம் (denofgeek.com) தெரிவித்துள்ளது. இந்த காந்த புயல் என்றால் என்ன.? இதற்கு முன்னால் எப்போது ஏற்பட்டது.? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தியது.

தற்காலிக பாதிப்பு ஏற்படும்..!

(எளிமையான வார்த்தைகளில்) காந்த புயல் என்பது சூரிய புயல் என்றும் அழைக்கப்படும். சூரிய காற்றின் (சூரிய வெடிப்பு/ சூரிய பட்டொளி) விளைவால் ஏற்படும் ஆதீத சக்தி பகிர்வே காந்த புயலாகும். இந்த பகிர்வானது நிகழும் போது, பூமியின் காந்தப்புலத்தின் மீதான தற்காலிக பாதிப்பு ஏற்படும்.

பொறியாளர்கள் பரிந்துரை.!

2018-ஆம் ஆண்டில் நிகழப்போகும் முதல் காந்த புயலானது, பூமி மீது தாக்கும் மூன்றாவது காந்த புயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் ஏற்பட்ட மின்காந்த புயல்களானது மின்சக்தி கட்டங்களை முற்றிலுமாக குழப்பின. அதன்வழியாக கற்ற படத்தின்படி, இதுபோன்ற நிகழ்வுகளின் போது அத்தியாவசியம் அல்லாத மின் கட்ட அமைப்புகளை மூடும்படி பொறியாளர்கள் பரிந்துரைக்கின்றன.

எதிர்மறையாக பாதிக்கும் திறன்.!

ஏனெனில் ஒரு கடுமையான காந்த புயலானது சாத்தியமான மின் கட்ட ஏற்ற இறக்கத்தை பாதிக்கும் வல்லமை கொண்டிருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு ஆராய்ச்சி மையத்தின்படி (JRC), ஒரு சக்திவாய்ந்த சூரிய புயலானது ஒரு கண்டத்தின் ரயில்வே அமைப்பையே பாதிக்கும். அதாவது ரயில்களை வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை எதிர்மறையாக பாதிக்கும் திறன்களை கொண்டது.

அதிகாரத்திமிர் பிடித்து அலைந்த அமெரிக்கா முட்டாளான கதை.!

இதே போன்ற சூரிய புயலொன்று அதிகாரத்திமிர் பிடித்து அலைந்த அமெரிக்காவை முட்டாளாக்கி, உலக யுத்தமொன்றை தூண்டிவிட்ட ஒரு கதையும் உள்ளது. 'கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையாம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, கேனப்பய ஊரு என்பது அமெரிக்கா என்பதற்கும், கிறுக்குப்பய நாட்டாமை என்பது அதன் ஆளுமைகள் தான் என்பதற்கும் மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் - அந்த சம்பவம். கொஞ்சம் தவறியிருந்தால் பூமியில் ஒரு பிரளயமே உண்டாகியிருந்திருக்கும். சரி, அப்படி என்னதான் நடந்தது.?

செல்வாக்கையும். ஆதிக்கத்தையும் மேம்படுத்தின.!

பனிப்போர் (Cold War) என்பது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990-வரை அமெரிக்காவிற்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த ஒரு வளர்ச்சி போட்டியாகும். அப்படியான பனிப்போரின் போது இந்த இரண்டு 'வல்லரசு' நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களை வளர்த்துக் கொண்டன. பிற உலக நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிகழ்த்தி உலகில் தனது செல்வாக்கையும். ஆதிக்கத்தையும் மேம்படுத்தின.