வாலி படத்தில் சிம்ரனுக்கு பதில் இவர்தான் நடித்தாரா முதலில் ஜோதிகாவின் முதல் சம்பளம் எவ்வளவு

நடிகரும் இயக்குனரும்மான எஸ்.ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் தான் வாலி, இவரின் முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை இயக்க வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்ட எஸ்.ஜே. சூர்யாவும் தனது திறமையை வெளிபடுத்தி ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தார் ரசிகர்களுக்கு. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் எஸ்.ஜே சூர்யாவுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் செய்திகள் உண்டு.

ajith

மேலும் இந்த பாடத்தில் பல சுவாரசியமான விஷயங்கள் நடந்துள்ளது, எஸ்.ஜே.சூர்யா ஒரு கதை எழுதி தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் கூறனார் அவருக்கும் கதை பிடித்து போக இந்த படத்தை கண்டிப்பாக நாம் செய்வோம் என கூறினார், ஆனால் சில நாட்கள் கழித்து இந்த கதையை பிறகு எடுக்கலாம், இப்பொழுது அஜித்தை வைத்து இரண்டு வேடத்தில் படம் எடுத்தால் அருமையாக இருக்கும்.

Keerthi-Reddy

Keerthi-Reddy

அதற்காக ஒரு கதையை தயார் செய்ய சொல்லிருக்கார் இதனை செவி கொடுத்து கேட்டுக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா வெறும் 15 நாட்களில் அஜித்திற்கு ஏற்றது போல் ஒரு பிரமாண்டமான கதையை தயார் செய்தார், இந்த கதை சக்ரவர்த்திக்கு பிடித்துபோனது, மேலும் இந்த படத்தில் தான் நடிகை ஜோதிகாவையும் அறிமுகம் செய்தார் எஸ்.ஜே.சூர்யா.

Keerthi-Reddy

ஆனால் படம் தொடங்குவதற்கு முன் சில பிரச்சனைகள் சினிமா ஸ்ட்ரைக், பெப்சி படைப்பாளிகள் பிரச்னை,என பல்வேறு பிரச்சனைகள் ஓடிகொண்டிருந்தது ஆனாலும் அவர்களின் ஆதரவோடு ஒரு நாள் ஷூட்டிங்கை தொடங்கி முடித்தார்கள்.

முதலில் இந்த படத்தில் சிம்ரன் நடித்த காட்சிகளில் நடித்தது கீர்த்தி ரெட்டிதான், அதேபோல் படத்தில் நிறைய காட்சிகளில் ஜோதிகா நடித்திருப்பார் ஆனால் பல காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டது ஜோதிகா நடித்த காட்சிகள், ஆனாலும் இந்த படத்தில் நடித்ததற்கு ஜோதிகாவுக்கு 1 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது.

படம் ரிலீஸ் ஆகி 3 நாட்கள் ஆகியும் படத்திற்கு வரவேப்பு கிடைக்கவில்லை பிறகு 4 வது நாள் கே.பாலசந்தர் அவர்கள் கால் செய்து யார் அந்த இயக்குனர் படம் பிரமாதமாக எடுத்துள்ளார் என பாராட்டினார், பிறகு படம் மாஸாக ஓடியது.