போனி கபூரால் வேதனையுடனேயே வாழ்ந்து இறந்த ஸ்ரீதேவி உறவினர் பரபர பேட்டி

மும்பை: நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரால் வேதனையில் வாழ்ந்து வேதனையுடனே இறந்துவிட்டதாக அவரின் உறவினர் வேணுகோபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ம் தேதி உயிர் இழந்தார். மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் அங்கிள் வேணுகோபால் ரெட்டி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

மாமியார்

ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரிக்கு போனி கபூரை பிடிக்காது. அவரை திருமணம் செய்ய வேண்டாம் என்று தனது மகளிடம் தெரிவித்தார். போனி தங்கள் வீட்டிற்கு வந்தபோது அவரை அசிங்கப்படுத்தினார் ராஜேஸ்வரி.

அடம்

ராஜேஸ்வரியின் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய விரும்பினார். இது குறித்து நாங்கள் அனைவரும் ஆலோசித்தோம். ஆனால் இறுதியில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

நஷ்டம்

சில படங்களை தயாரித்து போனி கபூருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். நஷ்டத்தை ஈடுகட்ட ஸ்ரீதேவி தனது சொத்துக்களை விற்றார். ஸ்ரீதேவி தன் இதயத்தில் வலியுடனேயே வாழ்ந்தார், வலியுடனேயே இறந்தார்.

பிரச்சனை

ஸ்ரீதேவி நிம்மதியாகவே இல்லை. வெளியுலகிற்காக சிரித்த முகமாக இருந்தார். ஆனால் நிஜத்தில் நிம்மதி இல்லாமல் அல்லாடினார். போனி தயாரித்த ஒரு படத்தால் அவர்களுக்கு கடும் நிதி பிரச்சனை ஏற்பட்டது.

விற்பனை

கடனை அடைக்க ஸ்ரீதேவி தனது சொத்துக்களை விற்றார். கையில் பணம் இல்லாததால் தான் அவர் மீண்டும் படங்களில் நடிக்க வந்தார். மூத்த தாரத்தின் மகன் அர்ஜுனுக்கும், தனக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று எங்களிடம் கூறினார்.

கவலை

மகள்கள் ஜான்வி, குஷியை நினைத்தும், அவர்களின் எதிர்காலத்தை நினைத்தும் கவலைப்படுவதாக ஸ்ரீதேவி எங்கள் உறவினர்களிடம் தெரிவித்தார். போனிக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளதும் கவலை அளிப்பதாக கூறினார்.

அறுவை சிகிச்சை

ஸ்ரீதேவி தனது மூக்கில் சில தடவை அறுவை சிகிச்சை செய்தார். மூக்கை அழகாக்க அவர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். அவரின் அம்மாவிடம் பேசியபோது தான் அது தெரிய வந்தது.

பணம்

ராஜேஸ்வரிக்கு அமெரிக்காவில் நடந்த தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையாகிவிட்டார். இது குறித்து அறிந்த ஸ்ரீதேவி மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்தார். அப்போது போனி ஸ்ரீதேவுக்கு உதவியாக இருந்தார்.