என்னை கொடுமை படுத்தினார்கள் கொலை செய்ய முயற்சித்தார்கள் அடுக்கும் ஷமியின் மனைவி

டெல்லி: ஷமி தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். இதில் பல புதிய உண்மைகள் வெளியாகி இருக்கிறது.

முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அதன்பின் அதற்கான ஆதரங்களை வெளியிட்டு இருந்தார்.

அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

அவமானப்படுத்தினார் 
அவமானம்

முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். வெளிநாட்டில் விளையாட செல்லும் போது வேண்டும் என்றே அவரைவிட்டுவிட்டு செல்வதாக புகார் அளித்துள்ளார். அப்படியே அழைத்து சென்றாலும் சக வீரர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்துவார் என்றுள்ளார்.

 

கொடுமை 
கொடுமைபடுத்தினார்

முகமது ஷமி தன்னை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்துவார் என்றும் கூறியுள்ளார். பலமுறை தன்னை மோசமாக தாக்கி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தில் இருப்பவர்களும் மோசமாக தாக்கி இருக்கிறார்கள் என்றுள்ளார்.


கொலை 
கொலை முயற்சி

மேலும் தன்னை அவரது குடும்ப உறுப்பினர்களும், ஷமியும் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியுள்ளார். இதனால்தான் தன்னை மோசமாக தாக்கினார்கள் என்று அவர் பேட்டி அளித்து இருக்கிறார்கள். தான் உயிரோடு இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றுள்ளார்.

 

உண்மை 
அம்பலம்

இது பொய்யான கணக்கு மூலம் பேஸ்புக்கில் வெளியானது என்று ஷமி மறுத்தார். ஆனால் தற்போது ஷமி மனைவி டீவி முன் உண்மையாக தோன்றி புகார் அளித்துள்ளார். மேற்கண்ட விவரங்களை அவர் நேரடி ஒளிபரப்பு பேட்டியில் அளித்துள்ளார். இதனால் ஷமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.