பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு காத்திருக்கும் நாச்சியார் குழு

ஹைதராபாத்: நாச்சியார் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜோதிகா, ஜி.வி. பிரகாஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

குறிப்பாக ஜி.வி.க்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தது.

தெலுங்கு உரிமை 
பாலா

நாச்சியார் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை ரூ. 90 லட்சத்திற்கு விலை போனது. ஆனால் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யுமாறு பாலா கோரிக்கை விடுத்தார்.

 

ஜோதிகா 
அனுஷ்கா

ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். ஆனால் அனுஷ்கா படுபிசியாக இருப்பதால் இந்த ரீமேக்கில் நடிக்க சம்மதிப்பாரா என்பது சந்தேகமே.


டப்பிங் 
ரிலீஸ்

அனுஷ்கா நடிக்க சம்மதிக்கவில்லை என்றால் நாச்சியார் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பாகமதி 
ஹிட்

அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பாகமதி. அசோக் இயக்கிய அந்த படம் இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.